Mutchedi Naduvil Vantheerae

முட்செடி நடுவில் வந்தீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முட்செடி நடுவில் வந்தீரே – என்னை
முற்றும் மாற்றம் செய்தீரே
ஏணியாக நின்றீரே – என்னை
உயரத்தில் தூக்கி சென்றீரே – (2)
அற்புதம் செய்தீரே
கிருபை தந்தீரே
அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4)
1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும்
பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2)
கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு
மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம்
2) சாத்தானின் சூழ்ச்சியாய் இருந்தாலும்
சேனையாய் அணிவகுத்து வந்தாலும் (2)
கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு
ஜெயித்திடுவேன் இயேசுவாலே – (2) – முட்செடி
நான் – ஜெயித்திடுவேன் இயேசுவாலே – (2) – முட்செடி