Muthirai Modhiram Lyrics

முத்திர மோதிரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.முத்திர மோதிரம் நீயே
உன்னை நான் தெரிந்து கொண்டேன்
எந்தன் உள்ளம் கையில் வரைந்து வைத்தேன்
கண்ணே கண்ணின் மணியும் நீயே – எந்தன் உள்ளம்
2.நான் உன்னை மறப்பதில்லை
நீ எந்தன் செல்ல பிள்ளை
உன்னை போதித்து விசாரித்து
என் வழிகளில் நடக்க செய்வேனே
ஒளிசுடராய் மாற்றிடுவேனே – உன்னை போதித்து
3.தாயை போல் உன்னை தேற்றி
அன்பின் ஆவியை ஊற்றி
உன்னை மரண இருளின் பள்ளத்தாக்கில்
ஒளிபெற செய்திடுவேனே
உன்னை ஜெயமாய்நடத்திடுவேனே – உன்னை மரண
4.உந்தன் ஆத்ம ஸ்நேகிதனாக
காப்பேன் என்றென்றுமாக
நீ கேட்டதெல்லாம் தரும்படிக்கு
துணையாய் நின்றிடுவேனே
வாழ்ந்து சுகமாய் இருக்க செய்வேனே – நீ கேட்டதெல்லாம்
5. முத்தரை மோதிரம் நீயே
உன்னை நான் தெரிந்து கொண்டேன்
எந்தன் உள்ளம் கையில்
வரைந்து வைத்தேன் கண்ணீர்
கண்ணின் மணியும் நீயே
எந்தன் உள்ளம்
கையில் வரைந்து வைத்தேன் கண்ணே
என் கண்ணின் மணியும் நீயே