Naan Aathma Manalan

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என் (2)
ஆண்டவர் இயேசுவை அனுதினமே
ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே -2
அனுதினம் ஸ்தோத்தரிப்பேன்
என் இயேசுவை (2)
1.தூதசேனை போற்றும் தூயாதி தூயனை
துதிகளின் மத்தியிலே
வாசம் செய்யும் நேசனை
ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை (2)
தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன்
என் இயேசுவை -ஆராதிப்பேன்
2.அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
அன்னிய பாஷையிலே அவரோடே பேசி
நன்மையால் என் வாழ்வை
நாள்தோறும் நடத்தும் (2)
நாதனை ஸ்தோத்தரிப்பேன்
என் இயேசுவை -ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் பாடல் வரிகள், Aaraathippen Naan Aathma Manalan Lyrics