Naan Arintha Orae Oru Naamam Lyrics

நான் அறிந்த ஒரே ஒரு நாமம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் அறிந்த ஒரே ஒரு நாமம்
என்னை விட்டு நீங்காத நாமம்
வழி மாறி போன பின்பும் கண்டுகொண்ட நாமம்
கல்வாரி ரத்தம் சிந்தி மீட்டெடுத்த நாமம்
இயேசுவே இயேசுவே
பாடுவேன் உன் நாமமே
துணை இல்லா நேரங்களில்
வலக்கரம் பிடிக்கிறீர்
திசை மாறி செல்லும் போது
வழி இது என்கிறீர்
பிரயோஜனமான பாத்திரமாக
உன் சித்தம் செய்திட
என்னை நீர் வணைகிறீர்
எழும்பி நான் பிரகாசிக்க
ஒளியினை தருகிறீர்
மரணம் மட்டும் நடத்திட
வாக்குகள் கொடுக்கிறீர்
என் கூட நீர் இருக்க
பயம் எனக்கில்லையே
உயர்ந்த மலையின் மேல்
நிற்கும் என் கால்களே