Naan Paada varuveeraiya

நான் பாட வருவீரைய்யா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Naan Paada varuveeraiya – நான் பாட வருவீரைய்யா
நான் பாட வருவீரைய்யா
நான் போற்ற மகிழ்வீரைய்யா
என் வாழ்விலே வந்தீரைய்யா
புது வாழ்வு தந்தீரைய்யா
1.தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே
2.இமைப்பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
உந்தன் அன்பை நான் மறப்பேனோ-2
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்
3.மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்-2
உந்தன் வாக்குகள் மாறாதது