naan uyirodu iruppadhu

நான் உயிரோடு இருப்பது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான்
நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான்
கிருபை தான் தேவ கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான்
1.கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா
கழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா – 2
பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா
பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா – 2
2.ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அடைக்கலமானவரே நன்றி ராஜா – 2
அதிசயங்கள் செய்தவரே நன்றி ராஜா
ஆறுதல் அளிப்பவரே நன்றி ராஜா – 2
3.எத்தனையோ நன்மை செய்தீர் நன்றி ராஜா
எனக்காக ஜீவன் தந்தீர் நன்றி ராஜா – 2
கண்ணீரை மாற்றினீரே நன்றி ராஜா
கன்மலை மேல் உயர்த்தினீரே நன்றி ராஜா – 2