Naangal Thorpathilaiyae

நாங்கள் தோற்பதில்லையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Naangal Thorpathilaiyae – நாங்கள் தோற்பதில்லையே
எல்லா இடங்களிலேயும்
எல்லா நேரங்களிலேயும் – இயேசு
எங்களை வெற்றி சிறக்க பண்ணுவார்
நாங்கள் தோற்பதில்லையே
நாங்கள் சோர்வதில்லையே
பெலனானவர் எங்கள் வாழ்விலே
துணையானவர் எங்கள் சார்பிலே
இருளான பாதை நடந்தாலும்
இரக்கங்கள் தந்து மகிழ்வாரே
வழியேதும் இல்லா திசையானாலும்
விழிவைத்து ஆலோசனை தருவாரே
நெருக்கப்பட்டாலும் வருத்தமில்லை
ஒடுக்கப்பட்டாலும் கலக்கமில்லை
இனிவரும் மகிமைக்கு
இவை இணையில்லையே
இனி வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
இயேசுவுக்காகவே
சுவிசேஷ தீபம் சுமப்போமே
சுடராக இருளில் எரிவோமே
அழியாத ஜீவன் தரும் இயேசுவை
விழி மூடும் வரையில் அறிவிப்போமே
பழி சுமந்தாலும் பதற்றமில்லை
பகை எழுந்தாலும் பயமுமில்லை
விசுவாசப் போராளியாய்
விதையாய் வீழ்வோம்
விண்மீது கண் வைப்போம்
மண்ணாசை களைவோம்