1.nal meetpar yesuve

நல் மீட்பர் யேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.நல் மீட்பர் யேசுவே
எழுந்த நாள் இதே,
கெம்பீரிப்போம்;
சாவு பாதாளத்தை
பிசாசு பாவத்தை
மேற்கொண்ட அவரை
கொண்டாடுவோம்.
2.மீட்புற்ற பக்தரே
மெய்ச்சபை கூட்டமே,
மா கர்த்தரை
போற்றுங்கள் களிப்பாய்
வேண்டுங்கள் கருத்தாய்;
கேளுங்கள் நன்றியாய்
மெய் வேதத்தை.
3.தேவாவியே, அன்பாய்
மெய்ஞ்ஞான ஒளியாய்
பிரகாசியும்;
உலகியல் சிந்தனை
அகற்றி, ஜோதியை
கொடுத்து; தயவை
நீர் காண்பியும்.