1.nal poom, en savuvelai serum

நாள் போம் என் சாவுவேளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.நாள் போம், என் சாவுவேளை சேரும்,
இதெத்தனை சமீபமோ?
என் ஜீவ ஓட்டம் நிறைவேறும்,
அவஸ்தை எப்போ காணுமோ?
ஆ! உம் அடைக்கலத்திலே
மரிப்பேனாக, யேசுவே.
2.காலையில் சுகமாயிருந்தும்,
இரா வருமுன் நான் சாகலாம்;
காலை எங்கே நான் வைத்தாலும்,
என் பிராணனுக்கு மோசமாம்;
ஆ! உம் அடைக்கலத்திலே
மரிப்பேனாக, யேசுவே.
3.கர்த்தாவே, க்றிஸ்தின் நீதியாலே,
என் பாதகத்தை மூடுமேன்;
நான் அதை விசுவாசத்தாலே
உடுத்திச் சுத்தமாகிறேன்;
ஆ! உம் அடைக்கலத்திலே
மரிப்பேனாக, யேசுவே.
4.என் ஜீவன் இன்றைக்குப் போனாலும்,
என் மீட்பரால் நான் பாக்கியன்;
என் சாவு நாளைக்கு வந்தாலும்,
அவர்க்குள் நான் நிலைப்பவன்;
ஆ! உம் அடைக்கலத்திலே
மரிப்பேனாக,யேசுவே.
5.நீர் இங்கே என்னை வைத்திருக்கும்
நாள் மட்டும் என்னை உமக்கே
பிரியனாக என்றென்றைக்கும்
நடத்தும்; கடைசியிலே
நான் உம் அடைக்கலத்திலே
மரிப்பேனாக, யேசுவே