nallathaaka mutivathellaam

நல்லதாக முடிவதெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை
இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை
அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்
அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார்
1. நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்
நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது
சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது
அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது
2. கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது
கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே
எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே
அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே
3. பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது
பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே
திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை
தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே