nallavar yesuvaiyae entum

நல்லவர் இயேசுவன்றோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நல்லவர் இயேசுவன்றோ
என்றும் மாறாத நேசரன்றோ
கைவிடாமல் காத்திடும்
ஆண்டவர் அவரல்லவோ -2
உம்மையன்றி நல்லவர்
பூவில் இல்லையே
உம்மைப் போல உத்தமர்
யாருமில்லையே-2
1.குறைவுகள் நிறைவாக்கும் நல்லவரே
அரணான கோட்டையும் ஆனவரே-2
2. அனுதினம் நடத்திடும் நல்லவரே
நம்பினோரை அறிந்த வல்லவரே
3. ஊழியம் தந்திட்ட நல்லவரே
உண்மையாய் வழிநடத்தும் வல்லவரே