Nallavare En Yesuve

நல்லவரே என் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

D maj
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே-2
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே-2-நல்லவரே
1.காணாத ஆட்டைப்போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி
என்னை நீர் தேடி வந்தீர்-2
தோள் மீது சுமந்து செல்லும்
நல் மேய்ப்பரே-நல்லவரே
2.கல்வாரி அன்பை கொண்டு
எனக்காய் ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த
மெய் தேவனே-2
புது வாழ்வு எனக்களித்த
என் நல்ல இரட்சகரே-நல்லவரே
அல்லேலூயா அல்லேலூயா