nam devathi devan

நம் தேவாதி தேவன் மண்ணில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

1) நம் தேவாதி தேவன்
மண்ணில் வந்தார் – நம்
பாவம் போக்கிடவே ( 2 )
ஏழை கோலமாக மாட்டு கொட்டினிலே – நம்
பாலகன் பிறந்தாரே ( 2 )
2) நம் ராஜாதி ராஜன்
மண்ணில் வந்தார் – நம்
சாபம் போக்கிடவே ( 2 )
மனு கோலமாக மாட்டு கொட்டினிலே – நம்
பாலகன் பிறந்தாரே ( 2 )
3) நம் தூயாதி தூயர்
மண்ணில் வந்தார் – நம்மை
தூய்மை ஆக்கிடவே ( 2 )
விண் மைந்தனாக மாட்டு கொட்டினிலே – நம்
பாலகன் பிறந்தாரே ( 2 )
4) நம் வானாதி தேவன்
மண்ணில் வந்தார் – நம்மை
காத்து ரட்சிக்கவே ( 2 )
புவி மைந்தனாக மாட்டு கொட்டினிலே – நம்
பாலகன் பிறந்தாரே ( 2 )