Namathu Iyaesu Karththarenru

நமது இயேசு கர்த்தரென்று நாவுகள்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நமது இயேசு கர்த்தரென்று
நாவுகள் யாவும் அறிக்கையிடும்
முழங்கால் யாவும் முடங்கிடும்
அவர் முன் முழங்கால் முடங்கிடும்
ஆமென் ஆமென் அல்லேலூயா ( 4)
சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்
அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் – 2
வல்லமை தேவனை நித்திய தேவனை
ஜாதிகள் யாவும் அறிந்திடுமே – ஆமென்
ஊற்றுண்ட பரிமள தைலமவர்
உலகில் வாசனை வீசுபவர் – 2
ஆதியும் அவரே அந்தமும் அவரே
நித்திய நாமம் உடையவரே – ஆமென்
3.வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே
வானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் – 2
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
பூமியின் கீழானோர் பணிந்திடுவார் – ஆமென்