nampaththakka kanmalaiye

நம்பத்தக்க கன்மலையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பத்தக்க கன்மலையே
திக்கற்றோர்க்கு அடைக்கலமே
நான் தேடும் மறைவிடமே
நான் சார்ந்துக் கொள்ளும் புகலிடமே
ராஜா இயேசு ராஜா
பரலோகத்தில் உம்மை அல்லால்
எனக்கு யாரும் இல்லை
பூமியிலும் உம்மைத் தவிர
வேறே விருப்பம் இல்லை
என் அரணே என் கோட்டையே
நான் நம்பும் கேடகமே
பெலனெல்லாம் நீர் தானையா
ராஜா இயேசு ராஜா
இவ்வுலகத்தில் உம்மை அல்லால்
உயர்ந்தது எதுவும் இல்லை
(உயர்ந்தவர் யாரும் இல்லை)
நான் நாடுவதெல்லாம் ஒன்றே
நீர் என்னோடிருப்பதுவே
என் அன்பே என் நேசமே
நான் தேடும் பொக்கிஷமே
ஆசையெல்லாம் நீர் தானையா
ராஜா இயேசு ராஜா
மேன்மையாய் என்னைக் குறித்து
எண்ண என்னில் ஒன்றுமில்லை
என் சுயத்தினால் சாதிப்பேன் என்று
சொல்ல எதுவுமில்லை
என் அடையாளம் ஆதாரம் நான் நம்பும் அஸ்திபாரம்
வாழ்வின் அர்த்தம் நீர் தானையா
ராஜா இயேசு ராஜா