nampikkai thevan neere

நம்பிக்கை தேவன் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பிக்கை தேவன் நீரே
நடத்தும் மேய்ப்பரும் நீரே – என் (2)
காணாமல் போன ஆடு நான்
அன்பாக தேடி வந்தீர் (2)
1. புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை அழைத்துச் சென்றீர் (2)
தமது நாமத்தின் மகிமைக்காக
நீதியின் பாதையில் நடத்துகின்றீர் (2)
நீதியின் பாதையில் நடத்துகின்றீர்
காணாமல் போன ஆடு நான்
அன்பாக தேடி வந்தீர் (2)
2. மரண இருளின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயப்படனே (2)
உமது கோலும் தடியும் கொண்டு
தேற்றினீரே தினமும் என்னை (2)
தேற்றினீரே தினமும் என்னை
காணாமல் போன ஆடு நான்
அன்பாக தேடி வந்தீர் (2)
3. சத்ருக்கள் முன்பாய் என் தலை உயர்த்தி
சத்திய ஆவியால் நிரப்புகிறீர் (2)
பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர்
நன்மையும் கிருபையும் தொடர செய்தீர் (2)
காணாமல் போன ஆடு நான்
அன்பாக தேடி வந்தீர் (2)
காணாமல் போன என்னையும்
அன்பாக தேடி வந்தீர் (2)