nan natanthathu nerukkaththin natuvile

கிருபை நாதரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் நடந்தது நெருக்கத்தின் நடுவிலே
நான் இருப்பதோ பெருக்கத்தின் நிழலிலே! -2
எடுத்து நடத்தியது கர்த்தரின் கரங்களே
கெடுதல் நீங்கியது கிருபையிலே
எடுத்து நடத்தியது கர்த்தரின் கரங்களே
முற்றும் நீங்கியது கிருபையிலே – கிருபைநாதரே
கிருபையின் நாதரே பிரிய நேசரே -2
தருகிறார் தம் அருமையான கிருபைகளை
தருகிறார் தம் அளவில்லா கிருபைகளை
கடந்து போனேன் கானக பாதையிலே
முடிவில் வந்து நின்றதோ கர்த்தர் வழியிலே! -2
சுமந்து வந்தார் தமது தோள்களின்
அமர்ந்து வந்தேன் அவர் கிருபையிலே!
சுமந்து வந்தார் தமது தோள்களின்
அவருடன் நடப்பேன், அவர் கிருபையிலே
பின்தொடரும் கஷ்டங்கள் தொல்லையே
பின்திரும்பி பார்க்கிறேன் ஒன்றுமில்லையே -2
விலக்கி மறைத்தார் விண்ணகர் விரல்களால்
விரைந்து நடந்தேன் அவர் கிருபையிலே
விலக்கி மறைத்தார் விண்ணகர் விரல்களால்
தொடர்ந்து ஓடுவேன் அவர் கிருபையிலே