nan utaintha sithaintha paththiram iyesaiya

நான் உடைந்த சிதைந்த பாத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா-2
நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த
1.மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்-2
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்-2
-நான் உடைந்த
2.சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா-2
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே-2
-நான் உடைந்த
3.உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே-2
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே-2
-நான் உடைந்த