nan vazhvatharku karanam iyesuve

ஜீவனும் தீர்க்காயுசுமானவரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் வாழ்வதற்கு காரணம் இயேசுவே
வாழும் வாழ்க்கையில் துணையானவர் இயேசுவே
என்றோ மரித்துப்போயிருப்பேன் என்றோ மடிந்துபோயிருப்பேன்
என்றோ அழிந்துபோயிருப்பேன் என்றோ இல்லாமல் போயிருப்பேன்
என் ஜீவனும் தீர்க்காயுசுமானவரே -4
1.அர்த்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த வாழ்விலே
தரிசனம் புரியவைத்தீர் நோக்கத்தை புரியவைத்தீர்
திசை மாறும்போதெல்லாம் தரிசனம் நேராக திருப்பினீர்
என்னை நடத்தினீர்
என் ஜீவனும் தீர்க்காயுசுமானவரே -4
2.எந்த ஒரு பயனும் இல்லாத என் வாழ்க்கையை
அநேகருக்கு பயன்படும்படி செய்தவரே
நான் நினைத்ததை விட நீர் நினைத்ததை செய்து ஆச்சரியமாய் என்னை மாற்றினீரே
என் ஜீவனும் தீர்க்காயுசுமானவரே -4
நான் உயிரோடு வாழ்வது உங்களாலதான்
உங்களாலதான் எல்லாம் உங்களாலதான்
நான் சுகத்தோடு வாழ்வது உங்களாலதான்
உங்களாலதான் எல்லாம் உங்களாலதான்
நான் பெலனோடு வாழ்வது உங்களாலதான்
உங்களாலதான் எல்லாம் உங்களாலதான்
நான் குடும்பத்தோடு வாழ்வது உங்களாலதான்
உங்களாலதான் எல்லாம் உங்களாலதான்
நீரே தீர்க்காயுசுமானவரே – 2
இயேசுவே தீர்க்காயுசுமானவரே – 2