Nandrigal Koorida Naavondru

நன்றிகள் கூறிட நாவொன்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றிகள் கூறிட நாவொன்று போதாது நாதன்
இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது (2) பெற்ற
நன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்
உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ உடன்
பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்
தாங்கியே அணைக்கும் தாய்மையே – தோளில்
தூக்கியே சுமக்கும் தந்தையே – (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்
தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா (2)இரத்தம்
சிந்தியே மீட்பைத் தந்தவா – நட்பின்
எல்லையாய் ஜீவன் ஈந்தவா (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
3.இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா உம்
விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2)நன்மை
யாவுமே தந்த நேசரே – உம்மைப்
போலவே யாரும் இல்லையே
நன்றி நன்றி இயேசு இராஜா – 6