Nangal Aarathikkum Devanae

நாங்கள் ஆராதிக்கும் தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நாங்கள் ஆராதிக்கும் தேவனே
தப்புவிக்க வல்லவர்
சிங்கங்களின் வாயினின்று
விடுவித்துக் காத்திடுவார்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆனந்தமாய் ஆராதிப்போம்
யெகோவா தேவனே
யெகோவா ஷாலோமே
யெகோவா ராஃபாவே
சுகம் தரும் தெய்வமே
பரிசுத்தமாக்கிடும்
மகா பரிசுத்த தேவனே
பரிசுத்த கரங்களை
உயர்த்தியே ஆராதிப்போம்
பெலப்படுத்தும் தேவனே
பெலவானாய் மாற்றுமே
மகிமையின் பாத்திரமாய்
மறுரூபமாக்கிடும்