nanmai seyya unakku

நன்மை செய்ய உனக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்மை செய்ய உனக்கு
திராணி இருக்கும்போது
நன்மை செய்யாமல் இராதே -(2)
1-உன்னிடத்திலே பொருள் இருக்கையிலே,
நாளை தருவேன் என்று சொல்லாதே -(2)
நன்மை செய்ய உனக்கு
திராணி இருக்கும்போது
நன்மை செய்யாமல் இராதே -(2)
2-அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணும்,
அயலானுக்கு தீங்கு நினைக்காதே -(2)
ஒருவன் உனக்கு தீங்கு செய்யாதிருக்க,
காரணம் இன்றி வழக்காடாதே -(1)
3-கொடுமை உள்ளவன் மேல் பொறாமை,
ஒரு பொழுதும் நீ கொள்ளாதே -(2)
அவனுடைய வழிகளில் ஒன்றையும்,
தெரிந்து நீ கொள்ளாதே-(1)
4-மாறுபாடு உள்ளவன் கர்த்தருக்கு,
அருவருப்பாகவே இருக்கிறான் -(2)
நீதிமான்களோடு அவருடைய,
ரகசியங்கள் இருக்கிறது -(1)
5-உன்னிடத்தில் பொருள் இருக்கையிலே
நாளை தருவேன் என்று சொல்லாதே -(2)