1.nanmais soroopiye

நன்மைச் சொரூபியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.நன்மைச் சொரூபியே,
மோட்சத்தின் ஜோதியே,
ப்ரகாசியும்;
எட்டாத ரட்சிப்பை,
எண்ணா மகிமையை;
விடாத தயவை
அளித்திடும்.
2.பூலோக ரட்சகர்
சர்வ தயாபரர்
தேவரீரே;
சுத்தமும் ஜீவனும்
வாடாக் கிரீடமும்
பூரண மீட்சியும்
அருள்வீரே.
3.ஆதியும் அந்தமும்
நித்தியம் ஞானமும்
தேவரீரே;
நீரே என் வாஞ்சையும்
நீரே என் தஞ்சமும்
சமஸ்த நன்மையும்
ஆனவரே.