nanri nanri enru nan patuven

நன்றி நன்றி என்று நான் பாடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி நன்றி என்று நான் பாடுவேன்
நன்றி, நன்றி என்று நான் கூறுவேன் – 2
கர்த்தர் செய்த நன்மைகளை நான்
நித்தமும் நினைத்திடுவேன்
என் தேவன் செய்த நன்மைகளை நான்
நித்தமும் துதித்திடுவேன்
செங்கடல், யோர்தான் நதி என்னை
சூழ்ந்து நெருக்கும் போது
கர்த்தர் கரம் அங்கேயுண்டு
வெட்டாந்தரை ஆகுமே – (2)
அவர் பார்வோன் சேனை முறியடிப்பார்
என் பாதையெல்லாம் வெளிச்சமாகும்
எரிகோ கோட்டை முன்னே நின்றாலும்
அது துதியினால் இடிந்து விழும்.
நன்றி, நன்றி என்று நான் பாடுவேன்
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கழுகு போல் பெலன் கொண்டு உயரே எழும்பிடுவோம் – (2)
அவர் காலைதோரும் கண்ணோக்குவார்
என்னை நாள்தோறும் நடத்திடுவார்
என்னை உள்ளங்கையில்
வரைந்ததினால் நான்
அசைக்கப்படுவதில்லை.
நன்றி, நன்றி என்று நான் பாடுவேன்