nanri solluvene – Nandri Soluveanae

நன்றி சொல்லுவேனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி சொல்லுவேனே – Nandri Soluveanae
நன்றி சொல்லுவேனே
வார்த்தைகள் போதாதே
நன்மை செய்த தேவா
உம்மைப் பாடுவேனே
சேற்றிலிருந்தென்னைத் தூக்கியெடுத்தீர்
பாவங்கள் கழுவி சுத்தமாக்கினீர்
பரிசுத்த வாழ்வு தந்தீர் பரமனின் பேரும் தந்தீர்
உள்ளம் நிறைவோடு உம்மைத் துதிப்பேன் நான்
கால்கள் சறுக்கும் முன்னே தாங்கிப் பிடித்தீர்
தோள்கள் தளரும் முன்னே சேர்த்து அணைத்தீர்
வழிகளை நேராக்கி பாதைகள் விரிவாக்கி
வருடங்கள் தோறும் நன்மை செய்கின்றீர் – நான்
தாயின் கருவறையில் தெரிந்து கொண்டீர்
பேரிடும் முன்னாலே எனை அழைத்தீர்
கண்ணின் மணி என்றீர் கைதனில் வரைந்துள்ளீர்
உமைப் பிரிந்தேது வாழ்வெனக்கு – நான்