nanri thinamum solven

நன்றி தினமும் சொல்வேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி தினமும் சொல்வேன்
நன்றி இயேசுவுக்கே -(2)
நன்றி நன்றி நன்றி
நாள்தோறும் சொல்லுவேன்
நன்றி நன்றி நன்றி
நாள்தோறும் பாடுவேன் நன்றி…
1.தனிமையின் பாதையில் நடக்கும் போது
கண்ணீரால் என் பாதை நிரம்பினதே-(2)
பிடித்தீர் துடைத்தீர் தூக்கி எடுத்தீர்
தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீர்-(2) – நன்றி நன்றி நன்றி
2. ஆகாரம் இல்லாமல் அலைந்தேனே
சாபத்தின் வாசலில் கிடந்தேனே-(2)
இரட்சிப்பை தந்து என்னை விடுவித்தீரே
விடுவித்து என்னை நீர் உயர்த்தினீரே-(2) – நன்றி நன்றி நன்றி
3. வீணான பழிகள் நான் சுமந்தேனே
அவமானம் வேதனை ஒடுக்கினதே-(2)
கிருபை என்னை விலகவில்லை
தள்ளுண்ட இடங்களில் நிரூபித்ததே-(2) – நன்றி நன்றி நன்றி
நன்றி தினமும் சொல்வேன் பாடல் வரிகள், Nantri Dhinamum Solvean Lyrics