nanri ullaththootu nan – Nandri ullathodu nandri

நன்றி உள்ளத்தோடு நான்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி உள்ளத்தோடு நான் – Nandri ullathodu nandri
நன்றி உள்ளத்தோடு நான் உம்மை துதிப்பேன்
நாதா செய்த நன்மைகள் எண்ணியே-2
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்திட்டீர்
எண்ணி எண்ணி நான்
நன்றி சொல்வேன்
திக்கற்ற என்னையும் தேடி வந்தீரே
திசைகள் காட்டி நடத்தி வந்தீரே-2
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்திட்டீர்
எண்ணி எண்ணி நான்
நன்றி சொல்வேன்
ஜெபத்தை தள்ளாமல்
கிருபையை விலக்காமல்
தயவாய் இருந்த தேவனே ஸ்தோத்திரம்-2 -எண்ணில்லா
வருசத்தை நன்மையால் முடிசூட்டினீரே
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீரே-2 எண்ணில்லா
சின்னவன் என்னையும் ஆசிர்வதித்து
சீரும் சிறப்பும் எனக்குத் தந்தீரே-2 எண்ணில்லா