Nanti Niraintha Ithayaththodu

நன்றி நிறைந்த இதயத்தோடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ்நாளெல்லாம் அவரை ஆராதிப்பேன்-2
என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர் என் இயேசு பரிசுத்தர்
நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ
என் போக்கிலும் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குதே
என் கரம் பிடித்த இயேசு
என்னை கைவிடவே இல்லை
அவர் நேசம் எந்தன் இன்பம்
அவர் நாமம் போற்றுவேன்