navil en iyesuvin namam

நாவில் என் இயேசுவின் நாமம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Roman Catholic Songs collection.

நாவில் என் இயேசுவின் நாமம்
காதில் என் இயேசுவின் இராகம்
கண்ணில் இயேசுவின் உருவம்
நெஞ்சில் இயேசுவின் அன்பு
மனது முழுதும் நன்றி நாதா
நாவில் என் இயேசுவின் நாமம்
நீ என் அருகில் வந்தால்
என் உள்ளம் உருகியே போகும்.
காதில் வசனம் கேட்டேன். அன்றோ
நீ என் ஜீவன் அன்றோ
ஆணித் தழும்புள்ள கைகளால்
என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர்
நீ என் திருவுடலாய் வந்தால்
என் ஆன்மா பனிபோல் ஆகும்
அழைக்கும் உம்குரல் கேட்டேன்
நீ என் ஆயன் அன்றோ
ஆணித்தழும்புள்ள கைகளால் என்னை
மார்போடு அணைத்துக் கொண்டீர்
நாவில் என் இயேசுவின் நாமம் பாடல் வரிகள், Navil En Yesuvin Namam lyrics