nee enthan theyvame, nan unthan pillaiye

நீ எந்தன் தெய்வமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

நீ எந்தன் தெய்வமே, நான் உந்தன் பிள்ளையே
என்னையும் வாழவைக்கும் அன்பு தெய்வமே
நன்றிகள் நான் சொல்ல, வார்த்தைகள் ஏதுமில்லை
இறைவா இறைவா எனை ஏற்றுக்கொள்ளுமே
1.நாளும் பொழுதுமாய் எனை காத்து இரட்சித்தாய்
நான் வேண்டும் போதெல்லாம் என்னோடு வந்திட்டாய் இடறில்லாமல் காத்து வந்தாய் (2)
இதுவே என் வாழ்வை மாற்றும் நன்றி பலியாகிடுமே…
2.தாயின் கருவிலே என்னை பேணி காத்திட்டாய்
நான் வாடும் போதெல்லாம் அன்போடு வளர்த்திட்டாய் குறையில்லாமல் காத்து வந்தாய் (2)
இதுவே என் வாழ்வை மாற்றும் நன்றி பலியாகிடுமே