nee katanthu vantha pathaikalai

நீ கடந்து வந்த பாதைகளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

நீ கடந்து வந்த பாதைகளை
அறிந்த தேவன் நான் அல்லவோ
நடத்திடுவேன் உயர்த்திடுவேன்
என் திட்டங்களை உன் வாழ்வில் நிறைவேற்றுவேன்
கைவிடுவேனோ கைவிடுவேனோ
உன்னை அழைத்த தேவன் நான் அல்லவோ
1.என் தேவன் எங்கே நீ அழுத போது
உண் சார்பில் வந்து தேற்றினேன்
உண் வலக்கரம் பிடித்து இது வரை நடத்தி
உந்தன் மேய்ப்பனாய் நான் இருந்தேன்
2.நீ சிந்தின கண்ணீர் எல்லாம் அறிந்த தேவன்
உனக்காக யாவையும் செய்வேனே
உன் தாயின் கருவில் அழைத்த தேவன்
உன்னை நான் என்றும் மறப்பேனோ
3.என் மீது நம்பிக்கை வைத்ததினால்
உனக்காக பந்தியை ஆயத்தம் செய்வேன்
உண் தலையை எண்ணெயால் அபிஷேகித்து
நன்மையையும் கிருபையும் உன்னை தொடரும்