nee thanimaiyil illai

நீ தனிமையில் இல்லை மகனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீ தனிமையில் இல்லை மகனே
நீ தனிமையில் இல்லை மகளே
உன் சூழ்நிலையை அறிந்திருக்கிறேன்
உன் கண்ணீரையும் கண்டிருக்கிறேன்
உள்ளம் தளர்ந்திடாதே மனம் சோர்ந்திடாதே
பலம் கொண்டு திடமாய் இரு
தடைகளை கண்டு நீயும் பயந்திடாதே
தடைகளை உடைப்பவர் நான் அல்லவா
சூழ்நிலையை கண்டு நீயும் துவண்டிடாதே
உன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிடுவேன்
உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா
உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா
ஆதாரம் இல்லை என்று தவிக்கிறாயோ
அநாதை ஆனேன் என்று அழுகிறாயோ
யார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதில்லை
நீ பயப்படாதே உனக்கு நான் துணை நிற்பேன்
உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா
உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா