neenga azhaitha azhaippum

நீங்க அழைத்த அழைப்பும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீங்க அழைத்த அழைப்பும்
கிருபை வரமும் மாறாதது
இந்த வானம் பூமி மாறினாலும் அழியாதது
தேவனே.... தேவனே (2)
அதை மனதில் நினைத்து பார்க்கும்போது
என் அறிவுக்கு எட்டாது
உலகம் தோன்றும் முன்பு
என்னை முன் குறித்தது'
தாயின் கருவில் என்னை
பேர் சொல்லி அழைத்தது
கிருபையோடு இரட்சண்யம் தேடி வந்தது
மெய் கிறிஸ்துவோடு இணைந்தேன்'
புது ஜீவன் மலர்ந்தது
2. பாதை மாறி போகும் போது
வேதம் தெரியுது நான் பாவத்தோடு
வாழும் போது பாடம் புகட்டுது
தேவனே உம் அன்பு
மட்டும் சொந்தமானது அதை தேடுகின்ற
பொழுதினிலே இன்பம் பிறக்குது
3. உன்னை அழைத்த தேவன் என்றும்
உண்மையுள்ளவர்
ஒருபோதும் கைவிடாது பாதுகாப்பவர்
உரைத்த வாக்கின்படியே
அவர் உன்னை நடத்துவார் நீ கரைசேர
ஒரு நாள் பரலோகில் நிறுத்துவார்