Neer Illadha Vaazhkaiyellam

நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
கசப்பாய் மாறுதே
நீர் இல்லாத நாளெல்லாம்
வெறுமையாய் தோன்றுதே -2
இயேசுவே என் ஆத்ம நேசரே
என் உயிரோடு கலந்தவரே
என் உயிரின் உயிரே -2
மதுரமே மதுரமே
தேனிலும் இனிமையே இனிமையே
தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே -2
ஆத்ம நேசர் எந்தன் நேசர் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம் -2
ஆத்ம நேசரே எந்தன் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம் -2