neer indri vazhvethu

நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரின்றி வாழ்வேது நீரின்றி வழியேது
நீரின்றி ஒளியேது நீரின்றி பதில் ஏது-2
இன்றி சுகம் ஏது நீரின்றி பெலன் ஏது
நீரின்றி ஆறுதல் ஏது நீரின்றி அன்பு ஏது
ஆபத்துக் காலத்தில் அனுகூல துணைநீரே
அழுகையின் பள்ளத்தாக்கில்
ஆறுதல் மழை நீரே -2
கூப்பிடும் நேரத்தில் உதவிடும் கரம் நீரே
மூழ்கிடும் நேரத்தில் தூக்கிடும் கைகள் நீரே
2. மனிதரின் இடுக்கணுக்கு
என்னைக் காத்து விடுவித்தீர்
கால்களை நிலைப்படுத்தி சறுக்காமல்
பார்த்துக் கொண்டீர்
முட்களில் நடக்கும் போது தோள்களில்
சுமந்து சென்றீர் கற்களில் நடக்கும் போது
கரங்களால் ஏந்தி சென்றீர்கா
3. ஆவியில் கலங்கும் போது என் பாரம்
அறிகின்றீர் அடைக்கலம்
ழைக்கும் போது மார்போடு அணைக்கின்றீர்
,துன்பத்தில் நடக்கும் போது
நீர் என்னோடு இருக்கின்றீர்
எனக்காக யாவையும் செய்து முடிக்கின்றீர்