Neer Mattum Ennodu illamal

நீர் மட்டும் என்னோடு இல்லாமல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் – 2
அடையாளம் தெரியாத அனாதையாய்
நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2
என்னை புரிந்து கொள்ள யாருமில்லை
என்னை அரவணைக்க யாருமில்லை
என்னை தேற்றிடவும் யாருமில்லை
என்னை தேடிடவும் யாருமில்லை -நீர் மட்டும்
1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்
நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2
நான் மன வேதனையாய் தவித்த போது என் மனதிற்கு மருந்தானீர் – 2
என் இயேசுவை போல் யாருமில்லை
அவர் அன்பிற்கிடாய் (அன்பிற்கு ஈடாய்) எதுவுமில்லை
என்னை பாவியென்று (பாவி என்று) அவர் வெறுக்கவில்லை
அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை- நீர் மட்டும்
2) என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர்
நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் – 2
என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம் உம் தோள் மீது சாய்த்துக் கொண்டீர் – 2
என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
என்னை அரவணைக்க என் நேசர் உண்டு
என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
என்னை தேடிடவும் என் நேசர் உண்டு -நீர் மட்டும்