Neer Seitha Nanmaigal Ninaikum

நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் செய்த நன்மைகள் , நித்தமும் எண்ணி நான்
நேசரே உம்மை நான் ஆராதிபன்
என் தஞ்சம் நீரே , என் கோட்டை நீரே
என் ஆத்மாவின் கீதமும் நீர் தானே
கைவிடாமல் காத்தவரே , கை தூக்கி எடுத்தவரே
உலையான சேற்றில் நின்று , ஜீவன் தந்து மீட்டவரே
என்னே உந்தன் அன்பு , என்னே உந்தன் கிருபை
என்னே உந்தன் இரக்கம் , என் ஏசுவே
என் தஞ்சம் நீரே , என் கோட்டை நீரே
என் ஆத்மாவின் கீதமும் நீர் தானே
பாதை மாறி சென்ற போதும் , நேசத்தாலே இழுத்து கொண்டீர்
யாரும் இல்லா வேளைகளில் , துணையாக கூட நின்றீர்
உம்மை மறந்து தூரம் போனேன் , என்னை தேடி ஓடி வந்தீர்
கலங்கி நின்ற வேளைகளில் , மார்போடு அணைத்து கொண்டீர்
தோல்வியாலே துவண்டு போனேன் , பெலன் தந்து ஜெயிக்க செய்தீர்
தடுமாறும் வேளைகளில் , தங்கினீர் உம் கரங்களினால்