NEER SEYYA NINAITHATHU

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

NEER SEYYA NINAITHATHU Davidsam Joyson | Tamil Christian Song 2019
I thank the Lord Jesus Christ for this song. Hear and be Blessed…
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
“I Know That You Can Do All Things; No Plan Of Yours Can Be Thwarted.” Job 42:2
Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
உம் வேலைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய
1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய
2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய