neere periyavar neer oruvare periyavar

நீரே பெரியவர் நீர் ஒருவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்
யோனாவிலும் சாலமோனிலும் நீரே பெரியவர்
நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்
சர்வத்திலும் சகலத்திலும் நீரே பெரியவர்
மனுஷரைப்பார்க்கிலும் நீரே பெரியவர்
பிரபுக்களைப்பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர்-2
நான் நினைப்பதிலும் ஜெபிப்பதிலும் அதிகமாய் செய்பவர்
1.கஷ்டத்தின் நேரங்களில் நீரே என் துணை
கண்ணீரின் பாதைகளில் நீர் ஒருவரே என் பதில்-2
என் சூழ்நிலையைப்பார்க்கிலும் நீரே பெரியவர்
என் தேவையை பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர்-2
என் உயர்வினிலும் தாழ்வினிலும் நீரே பெரியவர்
2.சீறிடும் புயல்களை நீரே அதட்டுவீர்
கொந்தளிக்கும் கடல்களை நீர் ஒருவரே அடக்குவீர்-2
யுத்தங்கள் செய்வதில் நீரே வல்லவர்
அற்புதம் செய்வதில் நீர் ஒருவரே சிறந்தவர்-2
என் மரணத்திலும் ஜீவனிலும் நீரே பெரியவர்