neerillatha vazhvinile nimmathiyillai

நீரில்லாத வாழ்வினிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரில்லாத வாழ்வினிலே நிம்மதியில்லை
நீரில்லாத வாழ்வு வெறும் கானல் நீரே (2)
புரியவில்லை தேவா புரிந்தவரே வாராய் – (2) – நீரில்லாத
மனிதனை நம்பி நம்பி மதிக்கெட்டு போனேன்
பேரிழந்த மரம் போல் மண்ணில் சாய்ந்தேன்
புரியவில்லை தேவா புரிந்தவரே வாராய் – (2) – நீரில்லாத
பாவத்தை தண்ணீர்போல் பருகி நானும் பார்த்தேன்
பாலைவனமாக நானும் மாறிப்போனேன் – (2)
புரியவில்லை தேவா புரிந்தவரே வாராய் – (2) – நீரில்லாத
வியாதியில் நான் விழுந்து மனம் நொந்து போனேன்
சோதனை சூழ்கையில் சோர்ந்தும் போனேன்
புரியவில்லை தேவா புரிந்தவரே வாராய் – (2) – நீரில்லாத