Neethaan Enakku Ellaam Yesuvae song lyrics

நீர்தான் எனக்கு எல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

நீ தான் எனக்கு எல்லாம் இயேசுவே
கருவில் உருவம் தந்தவரே – நீ தான் எனக்கு எல்லாம்
கண்ணின் மணியாய் அணைத்தவரே – நீ தான் எனக்கு எல்லாம்
சோர்வில் என்னைச் சுமந்தவரே – நீ தான் எனக்கு எல்லாம்
தனிமையில் தாங்கி அணைப்பவரே – நீ தான் எனக்கு எல்லாம்
அன்பின் இறைவா உந்தன் அருளைத் தாருமே – நான்
உம்மைப் போல நன்மைகள் செய்து வாழுவேன்
பெயரைச் சொல்லி அழைத்தவரே – நீ தான் எனக்கு எல்லாம்
பேரருள் பணியைக் கொடு;த்தவரே – நீ தான் எனக்கு எல்லாம்
எளியோர் உருவில் வாழ்பவரே – நீ தான் எனக்கு எல்லாம்
என்னை உமக்கு தந்துவிட்டேன் – நீ தான் எனக்கு எல்லாம்