Neethinman Koodaraththil

நீதிமானின் கூடாரத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிபின் கேம்பீர சத்தம்
கார்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும்
நீதிமான் நான் நீதிமான்
இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்
ஏழு தரம் விழுந்தாலும் சிங்கம் போல
தைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான்
1.நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
தன் காலத்தில் கனித்தரும் நீதிமான்
இலைகள் உதிரா மரம் நானே
செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்- நீதிமான்
2.காருண்யம் என்னும் கேடகத்தால்
கிருபையினால் சூழ்ந்து கொண்ட நீதிமான்
சாவாமல் என்றும் பிழைத்திருந்து
கர்த்தர் செய்கையினை விவரிக்கும் நீதிமான்
3.என் ஊக்கமான வேண்டுதல் பெலன் உள்ளதால்
மாற்றங்கள் செய்யும் நீதிமான்
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
நீதியாய் மாறின நீதிமான் – நீதிமான்