Neethiyamo Neer Sollum

நீதியாமோ நீர் சொல்லும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
நீதியாமோ நீர் சொல்லும் – ஓய் !
நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்
சரணங்கள்
1.ஆதுலர்க் கீவதே பாக்கியம் -பிறரை
ஆதரித்திடுவதே யோக்கியம் -ஓகோ!
பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் -மோட்ச
பாதை நடக்கில் சிலாக்யம் – நீதி
2.தரித்திரக் கிரங்குவோன் உடனே -இடுவான்
தற்பரனுக் கவன் கடனே -என்று
கருத்துடன் கருதியில் திடனே -உரைத்தார்
கடுநெஞ் சகல் மானிடனே – நீதி
3.அன்புடன் விதவையும் போட்ட – காசை
அதி வியப்பாய் யேசு காட்டப் -புகழ்
இன்புடன் அவள் மிசை சூட்ட -அதை
எவர்களும் அகத்தினில் நாட்ட – நீதி
4.பிறர் புகழும்படி இன்றே -செய்தால்
பிரயோசனமிலை என்றே, -பரன்
மறையதில் விளம்பினார் நன்றே; -அம்
மாதிரி விலகாது நின்றே – நீதி
5.பரிதானம் வாங்குதல் தீது – அதைப்
பறித்தறம் செய்தல் தகாது -உமக்
குரியதில் ஈவேது போதம் -இதில்
ஊன்றி இருப்பதே நீதம் – நீதி
6.ஏழைகளுக் கீயாது ஆஸ்தி -ஐயே
ஈண்டு சேர்ந்திடில் என்ன கீர்த்தி -இதோ?
வாழுல கடைந்திடில் நேர்த்தி -என்றும்
வாழலாம் அதுவே மா பூர்த்தி – நீதி