Nenjame Thuthi Paadidu

நெஞ்சமே துதி பாடிடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு … ஆ… ஆ (2)
பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார்
வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
உண்ணவும் உடுக்கவும்
தேவன் தந்திட்டார்… ஓ
கண்ணீர் சிந்தும் வேளையில்
கர்த்தர் கைவிடார்
காலங்கள் மாறினும்
இயேசு மாறிடார்… ஓ