nenysame nenysame

நெஞ்சமே நெஞ்சமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

நெஞ்சமே நெஞ்சமே
பாமாலை மீட்டி பூமாலை கோர்த்து
பாராளும் தேவனை – (பாடிடுவாய் – 2)
நெஞ்சமே நெஞ்சமே ஆண்டவரை நீ போற்றிடுவாய் – 2
உயிரில் கீதம் உறவில் தாளம்
உள்ளம் இசைக்க பாடிடுவாய் // 2
வாழ்வும் அவரே வளமும் அவரே
வழித்துணையாகும் வள்ளலும் அவரே // 2
ஆனந்தம் அவர்பாதம் பேரானந்தம் (நெஞ்சமே)
1.விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே
நேர்மையும் நீதியும் ஆனவர் அவரே (ஆ) // 2
பசித்திருப்போர்க்கு உணவளிப்பவரே
சிறைப்பட்டோரை விடுவிப்பவரே
ஆனந்தம் அவர்பாதம் பேரானந்தம் (நெஞ்சமே)
2.அன்பும் அருளும் ஆனவர் அவரே
அமைதியின் மருவுருவாயிருப்பவரே //2
நேரியமனத்தின் நேசம் அவரே – நம்
நெஞ்சில் வாழும் தீபமும் அவரே
ஆனந்தம் அவர்பாதம் பேரானந்தம் (நெஞ்சமே)