nenysukkulle varum enthan iyesuve

நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே – 2
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே – 2
தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே – 3
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே – 3
இமைகளில் இருந்து நீ சுமைகள்
தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதியை தந்திடும்
எந்தன் தந்தையாகினாய்
உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே
உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே
வானத்தின் மழைத்துளி மன்னைத் தேடுதே – 3
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே – 3
மேகமாய் திரண்டு நீ அருளைப்
பொழியும் அன்னலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா உணவின் சுவையாகினாய்
உன்னை தேடும் உள்ளம் ஒட்டிக்கொள்ளும் உன்னிலே
உன்னை பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே