nerthiyaai devan seidha

நேர்த்தியாய் தேவன் செய்த

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நேர்த்தியாய் தேவன் செய்த
பூமியை சாத்தான் கையில்
தந்தது ஆதாம் செய்த பாவம்
மீட்டிடும் நோக்கம் கொண்டு
பாரினில் வந்து இன்று
பாலனாய் பிறந்தாரே தெய்வம்
புதிதோ புதிது! இந்த செயலும் புதிது!
அரிதோ அரிது! இந்த அன்பும் அரிது!
இனிதோ இனிது! இந்தச் செய்தி இனிது!
அரிதோ அரிது! இந்த அன்பும் அரிது!
1. பிழை தோய்ந்த வாழ்வில் களைத்தோடும் நாமும்
பிழைத்தோங்கத்தானே உதித்தாரே தேவன்
இவர்தானே என் மீட்பர் எனக்கான நல் நேசர்
இதைத்தானே இன்னாளில் பறை சாற்றிக் கொண்டாடு
2. பகட்டான ஆடை, பல வண்ண மேடை
இதுவல்ல இன்னாள், உலகத்தின் நன்னாள்
இயேசு என்னும் நாமத்தை ஒரு போதும் கேளாத
பலர் பாடு திண்டாட்டம், நமக்கேது கொண்டாட்ட