nesikkiren ummai nesikkiren

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
என் மேலான தாய் என் ஏசுவே!
நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
என்னுயி ஒரு போதும் தள்ளாத என் ஏசுவே!
1.பாவி எனக்காய் பாரம் சுமந்து
பாடு சகித்தவரே
பாவ வாழ்க்கை வாழ்பவருக்காய்
பரிந்து பேசுபவரே -2
என் மேலான தாய் என் ஏசுவே
2.தரையில் விழுந்த மீனைப்போல
தவித்து கிடந்தேன்! ஜீவ நதியாய்
எனக்குள் பாய்ந்து ஜீவன் தந்தவரே-2
என் மேலான தாய் என் ஏசுவே
3.கனிகள் இல்ல மரத்தை போல தனித்து கிடந்தேன்!
ஜீவன் கொடுத்து அழிவை தடுத்து கனிகள் தந்தவரே-2
என் மேலான தாய் என் ஏசுவே