nisi yagova yagova

நிசி யேகோவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நிசி யேகோவா எந்தன் ஜெயக்கொடி
இயேசு எந்தன் ஜெயக்கொடி
சிலுவையின் நிழல்தானே
பரிசுத்தாவியின் பெலன் தானே
இயேசு எந்தன் ஜெயக்கொடி
1. இயேசு எந்தன் நாயகர்
தம் சிலுவையோ எந்தன் சின்னமாம் -2
ஹாலேலூயா ஹாலேலூயா (2)
பாவத்தோடு என்றும் தோல்வியில்லை
வெற்றியடைந்திடுவேன்
ஜெயக்கொடி என் இயேசு (5)
2. இயேசு எந்தன் இரட்சகர்
தம் நாமம் எந்தன் ஆயுதம்
ஹாலேலூயா ஹாலேலூயா
சோதனையில் தடுமாறாமல்
வசனத்தால் ஜெயித்திடுவேன்
ஜெயக்கொடி என் இயேசு
3. இயேசு எந்தன் அடைக்கலம்
அவர் அன்பு என்றும் மாறாதது
ஹாலேலூயா ஹாலேலூயா
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்தும் அவர்
ஜெயக்கொடி என் இயேசு