nyana manalare – Gnana Manalarae

ஞான மணாளரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஞான மணாளரே – Gnana Manalarae
1.ஞான மணாளரே,
பாவக் கேட்டிலே
சாகும் என்னைத் தப்புவித்துச்
சேர்த்த உம்மை நான் துதித்துப்
போற்ற ஏவுமே,
ஞானப் பர்த்தாவே.
2.அன்பின் ரூபம் நீர்;
என்னைத் தேவரீர்
அன்பாய்ச் சேர்த்துக்கொண்டதாலே
என்னை மெய் மகிழ்ச்சியாலே
பூரிப்பாக்கினீர்,
அன்பின் ரூபம் நீர்.
3.வல்ல கர்த்தரே,
துன்ப நாளிலே
பாவ மோசத்துக்குத் தப்ப
என்னை வன்மையால் நிரப்ப
வாரும், யேசுவே,
வல்ல கர்த்தரே.
4.உம்மைப் பற்றினேன்,
என்றைக்கும் விடேன்;
உம்மை விசுவாசத்தாலே
அண்டிக்கொண்டேன், ஆகையாலே
லோகத்தை நாடேன்
உம்மைப் பற்றினேன்.